தினம் பயின்று திறன் கைவரப் பெறு
விவசாயிகளுக்கான வாழ்நாள் கல்வி அதற்கான திறந்த நிலைக் கல்வி வளங்கள்

இன்றைய உலகில் விவசாயிகள் தங்களின் தினசரி விவசாய செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து அறிந்து கொள்ளவும், சரியான தகவல்களைப் பெற்றுக் கற்றுக் கொள்ளவும் வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.அவர்கள் எதிர் கொண்டுள்ள இந்த சவாலினை நடைமுறையில் உள்ள வகுப்பறை பயிற்சிகளின் மூலம் நேருக்கு நேர் விவசாயிகளிடம் பயிற்சியாளர்களும் விரிவாக்க அலுவலர்களும் சந்தித்து நிறைவேற்றுவது என்பது இயலாத செயல்.

அவ்வாறு விவசாயிகள் பயிற்சியாளர்களுடன் நேருக்கு நேர் சந்தித்து பயிற்சி பெறுவதற்குப் போதிய பயிற்சியாளர்களோ, பிற கட்டமைப்பு வசதிகளோ இல்லை. இதற்குத் தீர்வாக இன்றைக்கு  நடைமுறையில் உள்ள நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் ‘திறந்த வெளி கல்வி’ முறையில் பெரும்  எண்ணிக்கையிலான விவசாயிகளை சென்றடைவதற்கும், பயிற்றுவிப்பதற்குமான வாய்ப்புகள் உள்ளது.   

நவீன தொலைத் தொடர்பு தொழில் நுட்பங்களையும், கருவிகளையும் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் ஆண், பெண் விவசாயிகளுக்கும்,  விவசாய கூலிகளுக்கும் பயிற்சியளிக்கவும், கற்பிக்கவும் முடியும். இம்மாதிரி கற்றறிவதன், மூலம் விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் தாங்களே சுயமாக விவசாயத்திற்கான  தகவல்களையும், பயிற்சிகளையும் தேடிக் கண்டுபிடித்து கற்று பலன் பெறும் நிலையை அடைகின்றனர்.

அதன் மூலம் தங்களின் விவசாய விளை பொருட்களுக்கு மதிப்பு கூட்டவும், வளங்குன்றா வேளாண்மை செயல்பாடுகளை நடைமுறைப் படுத்தவும், இயற்கை வளங்களை சிக்கனமாகவும் அழிந்து போகாமல் பாதுகாக்கவும், உலகமயமாக்களால் அனைத்தும் சந்தை மயமாகிப்போன இன்றைய சூழலில், தங்களின் உணவுத் தேவை மற்றும் வாழ்வாதாரத்தினை நிலை நிறுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடிகிறது.

காமன்வெல்த் ஆப்  லேனிங் (Common wealth of Learning) என்கின்ற காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு நிறுவனம், தமிழகத்தில் விடியல், ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும்  அருள் ஆனந்தர் கல்லூரி  ஆகிய மூன்று நிறுவனங்களுடன் இணைந்து விவசாயிகளுக்கான வாழ்நாள் கல்வி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

நவீன தொலைத் தொடர்பு சாதனங்களான  கணிணி, அலைபேசி. மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மிக அதிக வீச்சுடன் விவசாயிகள் ‘திறந்தவெளி கல்வி’ முறையில் பயனடைய ‘திறந்த நிலைக் கல்வி’ வளங்களை வழங்குவதற்காக மேற்குறிப்பிட்ட நிறுவனங்களைக் கொண்டு ‘திறந்த நிலைக் கல்வி’ வளங்களுக்கான கூட்டமைப்பினை உருவாக்கி இருக்கிறது.    

விடியல்

விடியல் 1986-ல் ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் சமூக, பொருளாதார, அரசியல் வலிமையோடு வாழுகின்ற மாதிரி கிராம வாழ்க்கையை உருவாக்குவது என்னும் தொலைநோக்கு பார்வையுடனும், 'நீடித்த நிலைத்த சமுதாய மாற்றத்திற்காக மக்களை ஒருங்கிணைத்து, விழிப்புணர்வு கல்வி வழங்கி தங்களது பிரச்சனைகளுக்கான தீர்வை, தாங்களே கண்டறியும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தல் என்னும் குறிக்கோளுடன் தமிழ்நாடு, தேனி மாவட்டம், போடி பகுதியில் தொடங்கப்பட்ட ஒரு சமூக மாற்று நிறுவனம்.

1996-ம் ஆண்டு முதல் பெண்களை சுய உதவிக் குழுக்களாகவும், கூட்டமைப்புகளாகவும் ஒருங்கிணைத்து சேமிப்பு, தொழில் கடன்கள் மூலம் அவர்களது பொருளாதார மேம்பாட்டையும், 2007-ம் ஆண்டு முதல் காமன்வெல்த் ஆஃப் லேர்னிங் கனடா நிறுவனத்துடன் இணைந்து கடனுடன் இணைந்து மொபைல் போனில் ஆடுவளர்ப்பு தொடர்பான வாய்ஸ்மெயில் கல்வியை ஒத்தக் கருத்துகளுடைய கூட்டாளிகளுடன் இணைந்து 'மொபைல் போன்' என்ற பேசுவற்காக பயன்படும் தகவல் தொழில்நுட்ப சாதனத்தை கல்விக் கற்றுக் கொடுக்கும் சாதனமாக மாற்றி, இதுநாள் வரை 45000 பெண்ளும், விவசாயிகளும்  பயன்பெறும் வகையில் செயல்படுத்தியுள்ளோம்.

விடியல் நிறுவனத்தின் தொலைதூரக் கல்வித் தகவல்களை, வாய்ஸ்மெயில்களாகவும், வீடியோ படக்காட்சிகள், புத்தகங்கள் மூலமாக வழங்கிய தகவல்களை அனைத்து மக்களும் படித்து பயன்பெற வேண்டி திறந்த நிலை கல்வி வளங்களாக(OER) வழங்க வாழ்நாள் கல்வித் திட்ட கூட்டாளிகளுடன் இணைந்து விவசாயிகளுக்கு தேவையான தகவல்களை விவசாயமும், விவசாயியும் பயன்பெறும் வகையில் அளித்துள்ளோம்.  இது இரு வழி கற்றல் முறையாக தங்களது அனுபவங்களையும், தேவைகளையும் பகிர்ந்து அனைவரும் பயன்பெற கனடாவில் உள்ள காமன்வெல்த் ஆஃப் லேர்னிங், கனடா அமைப்புடன் அமைத்துள்ளோம்.

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் விவசாய வாழ்வாதார வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது. வளங்குன்றா விவசாய வளர்ச்சிக்கான செயல்பாடுகள் மற்றும் விவசாயிகளை விதை உற்பத்தியில் ஈடுபடுத்துவது,  அவர்களுடைய விளை பொருட்களுக்கு நேரடி சந்தைத் தொடர்பு, விவசாயிகளின் தேவைக்கேற்ப வாழ்நாள் கல்வியில், பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுத்துவது போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மேலும் ஆண், பெண் விவசாயிகளை சுய உதவிக் குழுக்களாகவும், விவசாயிகளின் மன்றங்களாகவும் உருவாக்கி, அவர்களுடைய சேமிப்புப் பழக்கத்தினையும், விவசாயிகள் தங்களின் உடனடித் தேவைக்கான வங்கித் தொடர்புகளையும் உருவாக்கித் தருகிறது. தவிர வங்கியில் கடன்பெற்று செய்யும் விவசாயம் சார்ந்த சிறு, குறு தொழில்கள், மற்றும் விவசாயம் சிறப்பாகவும், திறமையாகவும், லாபகரமாக செய்வதற்கும் தேவையான பயிற்சிகளையும், தகவல்களையும் தொடர்ந்து நவீன தொலைத் தொடர்பு சாதனங்களான அலைபேசி, கணிணி மற்றும்  சமூக வலைதளங்கள் மூலம் கொடுத்துக்  கொண்டிருக்கிறது.

இந்நிறுவனம் கன்னிவாடி கிராமத்தைச் சுற்றியுள்ள சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களுக்கான வானிலை முன்னறிவிப்புத் தகவல்களை, இந்நிறுவனம்  நிர்வகிக்கும் பி.வகை வானிலை மையத்தின் மூலம் அளித்துக் கொண்டிருக்கிறது. இப்பகுதியில் உள்ள சுமார் 1200 ஆண்,பெண் விவசாயிகளை ஒன்றிணைத்து ‘ரெட்டியார்சத்திரம் வளங்குன்றா வேளாண்மை உற்பத்தியாளர் நிறுமம்’ என்ற பெயரில் ஒரு வேளாண்மை உற்பத்தி நிறுமம் செயல் படவும் தேவையான உதவிகளை செய்து வருகிறது.

அருள் ஆனந்தர் கல்லூரி

மதுரை மாவட்டம், கருமாத்தூர் கிராமத்தில் தமிழக இயேசு சபையினரால் நடத்தப்பட்டு வரும் அருள் ஆனந்தர் கல்லூரி 1970- ல் தொடங்கப்பட்டு கடந்த 48 ஆண்டுகளாக கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு கல்விப் பணியோடு, சமுகப் பணியும் ஆற்றி வருகின்றது. பட்டிக்காட்டை நோக்கி பல்கலைக்கழகம் என்ற கல்லூரியின் குறிக்கோளுக்கிணங்க செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியானது தன்னாட்சிக் கல்லூரியாக பல்கலைக்கழக மானியக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கல்லூரியனது தேசிய தர நிர்ணய மதிப்பீட்டுக் குழுவின்படி (NAAC) உயர்ந்த நிலையைப் (A Grade with CGPA 3.66 Out of 4)பெற்றுள்ளது.

இக்கல்லூரியில் உள்ள அருப்பே கொள்கை ஆய்வு மையம், கிராமப்புற மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகளின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றது. மேலும் 1000 விவசாயிகளை ஒருங்கிணைத்து மதுரை மாவட்ட தென்னை மற்றும் இதர பயிர்கள் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கி இலாபகரமாக செயல்படுத்தி வருகின்றது. விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் மற்றும் பொதுத் தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் பிரிட்டோ வேளாண் தகவல் தொடுதிரை மையம் அருப்பே கொள்கை ஆய்வு மையத்தில் செயல்பட்டு வருகின்றது. மேலும் கல்லூரி மாணவ, மாணவியர்கட்கும், ஆராய்ச்சியாளர்கட்கும், தேவையான ஆராய்ச்சித் தகவல்களை வழங்கி வருகின்றது.  மேலும் கனடாவில் உள்ள காமன்வெல்த் ஆப் லேனிங் என்ற அமைப்பபின் உதவியுடன் வாழ்நாள் முழுவதும் கல்வி என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் மட்டுமின்றி மாணவர்களும் வாழ்நாள் கல்வியினை கற்று வருகின்றார்கள்.

In the present world learning needs of the farmers are so massive that conventional face-to-face instruction/interaction cannot address the scale of the challenge. There are simply not enough systems and facilities to address the needs of the primary sector. Using technology is the way to expand learning through the effective usage of Open and Distance Learning (ODL) methods. The modern information and communication technology (ICT) has given a new dimension to open and distance learning. ICT can help in reaching the men and women farmers, land less labourers and various other marginalized sections of the rural communities in a spatial-temporal context and to build their capacity. It facilitates a self-directed learning among the men and women farmers in developing value-added farming, encourage more sustainable use of natural resources, strengthen their ability to face globalization and ensure food and livelihood security.
Commonwealth of Learning (COL) has been working with local partners for implementing L3F project in the region, the partners of L3F are Vidiyal, Reddiarchatram Seed Growers Association (RSGA) and Arul Anandar College (AAC). Considering the emerging huge opportunity for on line learning using internet and smart phones, and the capacity of theL3F partners to use ODL methods, a federation was formed to create access to OER developed by these partners for the promotion of farmers continuous learning.

Partners in the OER Federation

VIDIYAL

VIDIYAL is a Non-profit organization working since 1986 to promote Agriculture and Women development inTheni District in the state of Tamil Nadu. VIDIYAL strives to enable poor and marginalized rural communities to socially, politically, and economically empower themselves. VIDIYAL is organizing the people for collective action through sustainable, community-based Self-Help Groups and Joint Liability Groups. It has promoted Theni District Farmers Goat Producer Company Limited, the shareholders are women farmers of landless, small and marginal holders. Facilitates farmers tohave access to development programs, capacity building workshopsandadvocacy for the rights of rural communities, and coordinates with local NGOs, Banks, Institutions, and Governments. VIDIYAL leverages the potential of technology to provide life-long learning opportunities using ODL methods for rural community members.Liaising with the State and Central Governments and other Agencies like, Rastriya MahilaKosh for the development of the rural people.

Reddirachatram Seed Growers Association (RSGA)

RSGA is a registered society and a non profit making organization working with the farmer of Dindigul district in Tamil Nadu state. The primary objectives of the organization are to mobilize rural men and women for the promotion of sustainable agriculture, seed production, direct marketing of the farm products and support the farmers for the continuous learning programme. The organization has mobilized men and women Self Help groups and Farmers clubs. It facilitates credit linkages of men and women farmers with banks and supports the learning of the farmers using modern ICT tools such as mobile phones, CDs and print based fort nightly. It also manages a B- type weather station, which provides five days weather forecast for the region. It isusing social media as an effective on line platform for promoting web based learning of the farmers. Closely works with a Farmers Producer Company called RESAPCOL managed by local farmers.

Arul Anandar College (AAC)

AAC is a autonomous minority Catholic Co-Educational Institution, affiliated to the Madurai Kamaraj University, one among the nine colleges, run by the Madurai Province of the Society of Jesus, which is located in the most backward region of Madurai District, Tamilnadu. It aims for the Integral Development of Rural Students and empowering them for Social Transformation. ArrupeCenter for Policy Research (ACPR) is an initiative of the college aimed at undertaking research and extension programmes relating to rural livelihoods and working for research and training for peer learning and policy support. Providing education for non formal sectors through OpenDistance Learning (ODL) methods with the help of modern technology of both offline and online mode to create knowledge revolution among non formalsectors. The college extends capacity building and technical support to Madurai Coconut Farmers Producer Organization run by the local farmers.

Images
Images
Images
Images